உப்பு சத்தியாகிரகத்தின் 89 ஆம் ஆண்டில் நினைவு பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள், வேதாரண்யத்தில் உள்ள ஸ்தூபியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உப்பு சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இந்த உப்பு சத்தியாகிரகத்தில் காந்தியடிகள், கலந்து கொண்டார். மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நூற்றுக்கணக்கானோர் உப்பு அள்ளி கைதாகினர். அவர்கள் உப்பு அள்ளிய இடத்தில் உப்பு சத்தியாகிரக ஸ்தூபி அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 30 ஆம் தேதி உப்பு அள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் 89 ஆம் ஆண்டு நிகழ்ச்சியை ஒட்டி, சுதந்திர போராட்ட தியாகிகள், வேதாரண்யத்தில் உப்பை அள்ளினர். பின்னர். ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.