தனியார் பள்ளியில் சேர கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் 88 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
ஏழை மாணவர்கள் 25 சதவிகிதத்தினர், தனியார் பள்ளியில் சேர்வதற்கு கட்டாய கல்வி உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. அது மட்டுமின்றி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஏழை மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே வழங்கி வருகிறது. இந்த நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், தனியார் பள்ளியில் சேருவதற்கு 88 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் எழை மாணவர்கள் வரும் 18 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.