இங்கிலாந்தில் ஒரே பியானோவை 88 பள்ளிக் குழந்தைகள் இசைத்து சாதனை படைத்துள்ளனர்.
88 பள்ளிக் குழந்தைகள் இணைந்து, ஒரே பியானோவை இசைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இயற்பியலாளரும், பிரபல ஓவியருமான லியானார்டோ டாவின்சியின், 500வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பர்மிங்ஹாம் என்ற இடத்தில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பொறியாளர்கள் பியோனோவை சில சிறப்பம்சங்களுடன் வடிமைத்திருந்தனர். இதனையடுத்து, 88 பள்ளிக் குழந்தைகள் பியானோவை இசைத்து, இத்தகைய உலக சாதனையை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.