புதிதாக 874 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 246 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 141 பேர் மகாராஷ்ட்ரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 518 பேர் ஆண்கள் மற்றும் 356 பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 பேரும், திருவண்ணாமலையில் 48 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19பேருக்கும் நெல்லையில் 15 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 765 பேர் குணமடைந்த நிலையில், மீண்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து313 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 55 புள்ளி 8 சதவீதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது. 8 ஆயிரத்து776 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.