இந்திய விமானப்படை நாளையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் முப்படைத் தளபதிகளும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நிறுவப்பட்டது. அதன் பின் ஆண்டுதோறும் அக்டோபர் எட்டாம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விமானப்படை நிறுவப்பட்டு 87ஆவது ஆண்டு நிறைவையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இசைவாத்திய முழக்கங்களுடன் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
ராகேஷ்குமார் சிங், கடற்படைத் தளபதி கரம்பீர் சிங் ஆகியோர் இசைவாத்திய முழக்கங்களுடன் அணிவகுத்துச் சென்று போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முப்படைகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பின் முப்படைத் தளபதிகளும் போர் நினைவிடத்தில் உள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் கையொப்பமிட்டனர். டெல்லியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள விமானப்படைத் தளங்களிலும் விமானப்படை நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.