827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

827 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் மட்டும் இடம் பெற்றால் அவைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆபாச தளங்களை முடக்கும்படி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 857 ஆபாச இணைய தளங்களை முடக்க உத்தரவிட்டனர். இதனைதொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், ஆபாச வீடியோக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட 827 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

Exit mobile version