80வது திருமண நாளை ஒற்றுமையாக கொண்டாடிய தம்பதியினர் – சிறப்பு தொகுப்பு

திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்து கொண்டு மற்றொரு திருமணம் செய்வதும் மேலை நாட்டு மக்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதியினர் 80 தாவது திருமண நாளை ஒற்றுமையாக கொண்டாடியுள்ளனர். அந்த தம்பதியினார் யார்? அவர்களைப் பற்றி விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு…

இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் ஆன தம்பதியினர் தொட்டதுக்கெல்லாம் விவகாரத்து பெற்று பிரிந்து செல்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது 106 வயதுடைய கணவனும் மனைவியும் தங்களுடைய 80 தாவது திருமண விழாவை கடந்த 22ம் தேதி கொண்டாடினர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட லான்ஹார்ன் கிராமத்தில்106 வயதுடைய ஜான் மற்றும் 105 வயதுடைய சார்லோட் ஹென்டர்சன் தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்கள் உலகில் வாழும் வயதான தம்பதியராக ’கின்னஸ் சான்றிதழ்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

1934-ம் ஆண்டில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இவர்கள் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். சார்லோட்டிடம் மலர்கொத்துடன் ஜான் தனது காதலை வெளிப்படுத்த இருவரும் 1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போரின் தொடக்கக் காலத்தில் திருமணம் செய்து கொண்டனர். இன்றுவரை இணைபிரியாத ஜோடியாக ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த தம்பதியினருக்கு வாரிசு எதுவும் இல்லை , இதை நினைத்து இவர்கள் ஒருபோது கவலைக்கொண்டதும் இல்லையாம். வாழ்க்கையில் எப்போதும் இணைப்பிரியாமல் இருக்க வேண்டும் என்று தங்களது ஒவ்வொரு மணி நேரத்தையும் தங்களுக்காகவே செலவிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறுகையில் எங்களுக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர்கள் தகவல் அளித்ததும் சற்று மனதளவில் கஷ்டப்பட்டோம் பிறகு அதனை எல்லாம் கடந்து எங்கள் காதலை நேசிக்க ஆரமித்தோம், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக நேசித்தோம்

இன்றுவரை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என தெரிவித்தனர். இந்த வயதான தம்பதியின் ஒற்றுமையை பார்த்து பலரும் தற்போது தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version