சாலையோர விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவாகரம் தொடர்பாக 80 வயது முதியவரிடம் விசாரணை!

கோவையில் சாலையோர விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட விவாகரத்தில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதை அடுத்து சந்தேகத்தின் பேரில் 80 வயது முதியவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை டவுன்ஹால், அடுத்த கருப்பண கவுண்டர் வீதியில் சாலை ஓரத்தில் இருந்த விநாயகர் சிலை சேதமடைந்த நிலையில் காணபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்தில் திரண்ட இந்து அமைப்புகள் சிலை உடைப்பில் ஈடுபட்ட நபர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் விநாயகர் சிலையை அதே இடத்தில் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பெரிய கடைவீதி காவல்துறையினர் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் சிலையை சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகின. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ராஜப்பன் என்ற 80 வயது நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது வீட்டிற்கு செல்ல இடையூறாக இருப்பதால் அவரே சிலையை உடைத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

Exit mobile version