முதுகுளத்தூர் அருகே உள்ள கண்மாய்களில், நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஏராளமான பறவை இனங்கள் இங்கு வந்து செல்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கடந்த 8 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட கண்மாய்கள், தற்போது தமிழக அரசு மேற்கொண்ட குடிமராமத்து பணியால், நிரம்பி வழிகின்றன. முதுகுளத்தூர் அருகே, கீழ்த்தூவல், அப்பனேந்தல் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள கண்மாய்களில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றன. கண்மாய்களில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், பறவைகள் இறைத் தேடி கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. உள்ளான் இன பறவைகள், காட்டு வாத்துகள், குருவிகள், கொக்கு – நாரை இனங்கள், கழுகு இனங்கள் என அதிக அளவில் பறவைகள் கண்மாயில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைந்துள்ளது.