கிரேட்டாவை தொடர்ந்து உலக நன்மைக்காக 8- வயது சிறுமி லிசிப்ரியா கங்குஜம் குரல் கொடுத்து வருகிறார்.
உலகில் புயல்,வெள்ளம் ,நிலநடுக்கம், நிலச்சரிவு, காட்டுத்தீ பல்வேறு பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு தெரிந்தோ தெரியாமலோ மனிதர்களாகிய நாம் காரணமாகி இருக்கிறோம்.
இப்படி சுற்றுச்சூழல் பாதிப்படைவதற்கு எதிராக 16 வயது சிறுமி கிரேட்டா, ஐநாவில் தனது குரலை உயர்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.. இவரைத் தொடர்ந்து லிசி பிரியா கங்குஜம் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக பேசிவருகிறார். 8 வயது சிறுமியான இவர் தனது பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு உலகின் நன்மைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் இந்திய நாடாளுமன்றத்தின் முன்பு பருவநிலை மாற்றத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். லிசிப்ரியா கங்குஜம் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் “please save our future ” என பதிவிட்டு, இதற்கு ”கிரேட்டா தன்பர்க் ” தான் இன்பிரேஷன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் குளிர்கால கூட்டத்தொடரில் Climate change law- வை நிறைவேற்ற வேண்டும் என 8 வயது சிறுமி வலியுறுத்தியுள்ளார். இதனை பாலிவுட் நடிகை தியா மிர்ஸா ரீடுவிட் செய்து பிரதமர் மோடி அவர்களே, குழந்தைகள் இன்றும் மற்றும் நாளையை நினைத்து கவலைப்படுகின்றனர் என தெரிவித்து, இதனை சற்று கவனிக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதிரியான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பேசி வரும் லிசிப்ரியா கங்குஜம் பல சர்வதேச தலைவர்களையும் சந்தித்துள்ளார். மேலும் குவாட் அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாமின் குழந்தைக்கான விருதை லிசி பிரியா கங்குஜம் பெற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.