8 வழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மத்திய அரசின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்திட்டத்திற்கான அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.