‘பேட்மேன் மாஸ்க்’ எனப்படும் birth mark -உடன் பிறந்த 8 மாதப் பெண் குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 8 மாத குழந்தை லூனாவுக்கு முகத்தில் நெற்றி மற்றும் கண்களைச் சுற்றி கறுப்பு நிறத்தில் மச்சம் போன்று காணப்படுகிறது. இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமி இந்த இடங்களில் அடர்ந்து காணப்படுவதால் லூனாவுக்கு இப்படி உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிறமி குறைபாடு பின் வரும் காலங்களில் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் வலியில்லாத அறுவை சிகிச்சை மூலம் முதல் கட்டமாக லூனாவின் நெற்றியில் உள்ள நிற மாறுபாட்டை நீக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து லூனாவின் தாயார் இந்த குழந்தைக்காக இன்ஸ்டாகிராமில் luna.love.hope என்ற பக்கத்தை ஆரம்பித்து, லூனாவின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
அவற்றை உலகெங்கிலும் உள்ளவர்கள், அவளின் முகத்தில் உள்ள இந்த நிற மாறுபாடு ’பேட்மேன் மாஸ்க்’ போல உள்ளது என்று கூறி லூனாவை நிஜ பேட்மேன் என ரசித்து, வாழ்த்தி கொண்டாடி வருகின்றனர்.