நாமக்கலில் 8 லட்சம் மதிப்பிலான புடவைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட பாப்பம்பாடியில் தேர்தல் அலுவலர் செல்வகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இளம்பிள்ளை பெருமாள் கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான 8 லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான காட்டன் மற்றும் பாலிஸ்டர் புடவைகள் ஒரு மினி டெம்போவில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.