மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 , 237 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 , 237 கன அடியாக சரிந்துள்ளது. 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரத்து 290 கன அடியில் இருந்து, 8 ஆயிரத்து 237 கன அடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 113 . 78 அடியாகவும், நீர் இருப்பு 83 . 897 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு அரை அடி வீதம் குறைந்து வருகிறது.

Exit mobile version