நாட்டு வெடி வெடித்ததில் 7-ம் வகுப்பு மாணவர் பலி

நாட்டு வெடி வெடித்தபோது 7-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பட்டாசு வெடிக்கும்போது சிறுவர்கள் பாதுகாப்பாக கொளுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், சிலர் அதை ஏற்றும், சிலர் அதை காற்றில் பறக்கவிட்டும் விடுகின்றனர். இதனின் விளைவு ,பெரிய தீக்காயம் அல்லது உயிருக்கே பாதிப்பு ஏற்படும் நிலை உண்டாகிறது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி, மணிவேல் நாட்டு வெடியை வெடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வெடித்த வெடி அவர் மீதே விழுந்ததாக தெரிகிறது.

பட்டாசு தாக்கியதில், மயக்கமடைந்த மணிவேலை, அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிவேலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மணிவேல் உயிரிழந்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Exit mobile version