4 தொகுதி இடைத்தேர்தலில் சராசரியாக 77.62% வாக்குப்பதிவு : சத்யபிரதா சாஹூ

இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டப்பேரவை தொகுதிகளில் சராசரியாக 77.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர்  ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61% வாக்குகளும், சூலூர் தொகுதியில் 79.41% வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் 74.17% வாக்குகளும், அரவக்குறிச்சியில் 84.28% வாக்குகளும் பதிவாகியுள்ளன. நான்கு தொகுதிகளிலும் சராசரியாக 77.62 % வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Exit mobile version