தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

புதிதாக 765 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 47 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள். கொரோனா உறுதிபடுத்தப்பட்ட 765 பேரில் 464 பேர் ஆண்கள் மற்றும் 301 பேர் பெண்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் சென்னை மாவட்டத்தில் இன்று மட்டும் 587 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தபடியாக செங்கற்பட்டு மாவட்டத்தில் 46 பேருக்கும் திருவள்ளூரில் 34 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 21பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 833 பேர் முழுமையாக குணமடைந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 324 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் சதவீதம் 51 புள்ளி 13 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. 7839 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version