உலகளவில் 73.16 லட்சத்தை கடந்த பாதிப்பு!!

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 லட்சத்து 16 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 45ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு, ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 7 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ரஷ்யாவில் 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் 2 லட்சத்து 89 ஆயிரம் பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 76 ஆயிரம் பேரும், இத்தாலியில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேரும், பெருவில் 2 லட்சத்து3 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, ஜெர்மனி, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை, உலகம் முழுவதும் சுமார் 36 லட்சத்து 02 ஆயிரம் பேர், நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version