நாடாளுமன்ற தேர்தலில் 71.90 சதவீத வாக்குகள் பதிவு-தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 71 புள்ளி 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்குப்பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையம் இன்று மாலையில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில், தமிழகத்தில் நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 71 புள்ளி 90 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே போன்று 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 75 புள்ளி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நாடாளுமன்ற தொகுதிகளில், தருமபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீதமும், குறைந்த பட்சமாக தென் சென்னையில் 56.34 சதவீதமும் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. சட்டமன்ற தொகுதிகளை பொருத்த வரைசோளிங்கரில் அதிகபட்சமாக 82.26 சதவீதம் பதிவாகியுள்ளதாகவும், குறைந்த பட்சமாக பெரம்பூரில் 64.14 சதவீதம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version