டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்!

சமூகஇடைவெளியை கடைபிடித்து மது விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான முன்னேற்பாடாக, வண்ண வண்ண டோக்கன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வாரத்தின் 7 நாட்களும், 7 வண்ண டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. டோக்கன் உள்ளவர்கள் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கிக் கொள்ளலாம். நீலம், பச்சை, ஆரஞ்சு, பிங்க் உள்ளிட்ட 7 நிறங்களில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன்களில் கடை எண் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்மூலம், ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் ஒன்று கூடாமல் தடுக்க முடியும். மேலும், இத்தகையை நடவடிக்கைகளால், கொரோனா பரவும் ஆபத்தும் தவிர்க்கப்படுமென டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Exit mobile version