பெட்ரோலியப் பொருட்களின் உலகம் முழுவதுமுள்ள உற்பத்தியில் 85 %க்கும் மேற்பட்ட எண்ணெய் வளங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை வெறும் ஏழே ஏழுதான்.
7 sisters of oil world – எண்ணெய் உலகின் 7 சகோதரிகள் என்று அழைக்கப்படும் கம்பெனிகள் இவைதான்.
1.ஆங்கிலோ – ஈரானியன் எண்ணெய் நிறுவனம் (இப்போது பிபீ என்று அழைக்கப்படுகிறது.)
1908 ம் ஆண்டு ஈரானில் கண்டுபிடிக்கபட்ட பெரும் எண்ணெய் வளத்திற்குப்பிறகு பிரிட்டனால் நிறுவப்பட்ட ஆங்கிலோ-பெர்சிய எண்ணெய் நிறுவனம் (APOC) பின்னாளில் 1935-ம் ஆண்டு ஆங்கிலோ- ஈரானிய எண்ணெய் நிறுவனம் (AIOC) என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் 1954-ம் ஆண்டு பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.ஈரானின் முதல் பெட்ரோல் கிணறு இதுதான்.
2.எண்ணெய் வளைகுடா-1901 ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய எண்ணெய் நிறுவனம் இது. 1941 ல் உலகின் 8 ஆவது பெரிய நிறுவனமாகவும், 1970 ல் 9 ஆவது பெரிய நிறுவனமாகவும் விளங்கிய இதன் தலைமையிடம் பிட்ஸ்பர்க்கில் உள்ளது. 1985 ல் இது ஸ்டேண்டர்டு ஆயில் ஆஃப் கலிஃபோர்னியா நிறுவனத்துடன் இணைக்கப்பெற்றது.
3.ராயல் டட்ச்ஷெல்-ஷெல் என்று நம் எல்லோராலும் அறியப்படுகிற நிறுவனம்தான் இது. நெதர்லாந்தை தன் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் ஒரு பிரித்தானிய-டச்சு கூட்டுநிறுவனமாகும். 2016 ன் 6-வது மிகப்பெரிய நிறுவனமாகவும் விளங்கியது.2013ம் ஆண்டு இந்த நிறுவனந்தின் வருவாய் டச்சு தேசிய பிராந்தியத்தின் மொத்த வருவாயின் 84% என்பது குறிப்பிடத்தக்கது.
4.ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனி ஆஃப் கலிஃபோர்னியா-1940 லிருந்து 1970 வரையில் எண்ணெய் வர்த்தகத்தில் கோலோச்சிய 7 சகோதரிகளில் மிக முக்கியமான அதிகாரம் செலுத்திய நிறுவனம் இது. எரிபொருள், உயவுப்பொருட்கள் மற்றும் கூடுதலாக பெட்ரோ-வேதிப்பொருட்களையும் உற்பத்தி செய்தது இந்த நிறுவனம்.
5.ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனி ஆஃப் நியு ஜெர்ஸி- Exxon – 1972 ல் தான் இந்தப் பெயரால் அழைக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை எக்ஸான் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. 1999 ம் ஆண்டு எக்ஸான் மொபில் நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கியது. இதன் பெருமளவு கவனம் பென்சில்வேனியா, நியூ ஜெர்சி, டெக்ஸாஸ் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியான தென்மேற்கு மாகாணங்களைக் குறிவைத்தே இருந்தது.
6.ஸ்டேண்டர்டு ஆயில் கம்பெனி ஆஃப் நியூயார்க்-மொபில் என்ற இந்த நிறுவனம் இதற்கு முன் ஸ்கோனி-வேக்யும் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 1999 ல் எக்ஸான் நிறுவனத்துடன் இணைந்த எக்ஸான்மொபில் என்று ஆனது.அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயில் கம்பெனிகளில் ஒன்று.
7.டெக்ஸாக்கோ -(“The Texas Company”) டெக்ஸாகோ என்று அழைக்கப்படுகிறது. ஹெவோலின் மோட்டார் எண்ணெய் என்னும் நிறுவனமும் இதன் கட்டுப்பாட்டில் இருந்தது.2001ம் ஆண்டில் செவ்ரான் கார்ப்பரேஷனுடன் இணைவதற்கு முன்பு வரையில் இது தன்னிச்சையான நிறுவனமாகவும் இருந்துவந்தது. ஸ்பிண்டில்டாப்பில் எண்ணெய் இருப்பது தெரிந்ததும் 1901ம் ஆண்டு டெக்ஸாஸ் எண்ணெய் நிறுவனம் என்று தொடங்கப்பட்ட நிறுவனம் இது.
சகோதரிகள் என்றதனாலோ என்னவோ இந்த நிறுவனங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக்கொண்டும் ஒருவரையொருவர் வீழ்த்துவதிலும் குறியோடிருந்தன. இன்று எண்ணெய் உலகம் எவ்வளவோ மாறிவிட்ட போதும் இந்த 7 சகோதரிகளும் எண்ணெய் வரலாற்றில் ஈடு செய்யமுடியாத பங்களித்தவர்கள் என்பது மட்டும் உண்மை.