நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 24 மணி நேரத்தில், தலைமைக் காவலர் உட்பட 7 பேர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, கொரோனா நோய்த் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நேற்று ஒரே நாளில், சுமார் 352 நபர்களுக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
மங்களபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் பாலசுப்பிரமணி என்பவர், கொரோனா நோய் தொற்றால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இம்மருத்துவமனையில், தலைமைக் காவலர் உட்பட 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடயே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளிட்ட அனைத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவதில், தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.