இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட விரோதமானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் சிறிசேனா கட்சியைச் சேர்ந்த 7 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்ததில் இருந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் ராஜபக்சவால் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவிற்கு போதிய ஆதரவு இல்லை. எம்.பி.க்களை இழுக்கும் முயற்சியும் பலன் அளிக்காததால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் அதிபர் சிறிசேனா. இந்நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற கலைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அதிபர் சிறிசேனா கட்சியைச் சேர்ந்த 7 எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிபர் சிறிசேனாவிற்கு மேலும் சிக்கல் வலுத்துள்ளது.