அமெரிக்காவில் நடைபெற்ற கௌரவ மேயர் பதவிக்கான போட்டியில் 7 மாத குழந்தை வெற்றி பெற்று அசத்தியுள்ளது,
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்பு துறையில் பணியாற்றும் வீரர்களுக்கு நிதி திரட்ட “கௌரவ மேயர்” பதவி ஏலமிடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கௌரவ மேயர் பதவிக்கான ஏலமானது சமீபத்தில் நடைபெற்றது. இதில் 7 மாத ஆண் குழந்தை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
அந்த குழந்தையின் பெயர் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன். அவர் “மேயர் சார்லி’ என அனைவராலும் தற்போது அழைக்கப்படுகிறார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பதவியேற்பு விழா கலை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டியது. 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த விழாவில் குழந்தை மெக்மில்லன், “தான் மேயர் பதவியை மனதார ஏற்றுக்கொண்டு அதற்கு உண்மையாகவும் இருப்பதாகவும், நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும் அன்போடு இருப்பேன் எனவும், தீயணைப்பு துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வதோடு மட்டுமல்லாமல், நாட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன்’’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அமெரிக்காவில் கௌரவ மேயராக 7 மாத குழந்தை பதவியேற்றது அனைவரிடத்திலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.