7 லட்சம் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன!

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தென்கொரியாவில் இருந்து 7 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.

தென்கொரியாவை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர். கருவிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி 15 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் கடந்த வாரம் வந்த நிலையில், கூடுதலாக 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை கொள்முதல் செய்ய புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 7 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தென்கொரிய நிறுவனத்திடமும், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து தலா 1 லட்சம் கருவிகளும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் கருவிகளை வாங்கவும் முடிவு செய்யபட்டது. இந்த நிலையில் தென்கொரியாவில் இருந்து 7 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வந்த நிலையில், மீதமுள்ள கருவிகள் ஒருவாரத்திற்குள் வந்தடையும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version