நாடு முழுவதும் 7 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களுக்காக, பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் 5 கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டுக்குள் 8 கோடி இணைப்புகள் வழங்குவது என மாற்றியமைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாடு முழுவதும் 34 மாதங்களில் இதுவரை 7 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன்படி நாள் ஒன்றுக்கு சராசரியாக 69 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.