அரசு விடுதியில் அனுமதியின்றி தங்கியிருந்த 7 சிறுவர்கள்

ராயபுரம் அரசு ஆடவர் விடுதியில் அனுமதியின்றி தங்கியிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் ரயில் மூலம் கொல்கத்தாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வந்த சிறுவர்கள் 7 பேர் ராயபுரம் அரசு ஆடவர் விடுதியில் தங்கியிருந்தனர். முறையான அனுமதி இல்லாமல் விடுதியில் இந்த சிறுவர்கள் தங்கியிருப்பதை அறிந்த விடுதி காப்பாளர், காவல்துறைக்கும், சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஜெயந்தி, அந்த சிறுவர்களை சொந்த மாநிலத்திற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தார். இதனையடுத்து ரயில் மூலம் அவர்கள் கொல்கத்தா அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுடன் தமிழக காவல்துறையை சேர்ந்த அலுவலர்களும் பாதுகாப்பிற்காக சென்றுள்ளனர். அவர்களை வழி அனுப்பி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி. ஜெயந்தி, சிறுவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி மேற்கு வங்க டி.ஜி.பியிடம் கேட்டுக் கொண்டதாக கூறினார்.

Exit mobile version