அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற 7 மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி உட்பட 7 மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமைக் கழகத்தில் 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நெல்லை மாநகர், நெல்லை புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு மற்றும் வேலூர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றிபெறுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவது மற்றும் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு  மற்றும் தென் சென்னை தெற்கு ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

Exit mobile version