அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ப்ரட் கவானாஃப் (brett kavanaugh) என்பவரல், 32 ஆண்டுகளுக்கு முன்னர் பத்மா லட்சுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்ட தகவலை மனநல நிபுணரான கிறிஸ்டின் ப்ளாஸி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பத்மாலட்சுமி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில், 7 வயதில் உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறியுள்ளார்.
16 வது வயதில், தான் காதலித்த இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தவே அதைப் பற்றி இப்போது பேசுவதாகவும், பிரச்னைகளை, பாதிப்புகளை வெளியில் சொல்லாமல் இருப்பது குற்றம் புரியும் ஆண்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.