கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகளை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இந்திய தொல்லியல் துறை சார்பாக, கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட கீழடி அகழ்வாய்வுப் பணி, 3 கட்டங்களாக 2017ம் ஆண்டு வரை நடைபெற்றது. தொடர்ந்து 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தமிழக தொல்லியல் துறை சார்பாக, நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்றது. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக தொல்லியல் துறை சார்பாக கீழடியில் 6-ம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.