6-வது கட்ட மக்களவை தேர்தலில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நிண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் ராஷ்டிரபதி பவனில் உள்ள 10ம் எண் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்களித்தார்.
டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியோ மற்றும் டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆகியோர் வாக்களித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் வாக்குப்பதிவு செய்தார். மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தனது வாக்கை செலுத்தினார்.
கிழக்கு டெல்லியில் உள்ள பழைய ராஜேந்திர நகர் வாக்குச்சவடியில் பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் வாக்களித்தார். அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பைன்க்ரெஸ்ட் வாக்குச்சாவடியில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது வாக்கை செலுத்தினார்.