லோக் அதாலத் மூலம் 68 ஆயிரத்து 347 வழக்குகளுக்கு தீர்வு

தமிழகத்தில் நடந்த லோக் அதாலத் மூலம் 68 ஆயிரத்து 347 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தொகையாக 274 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை, இருதரப்பினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்துடன் சுமுக தீர்வை எட்ட 3 மாதங்களுக்கு ஒருமுறை தேசிய லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் இருதரப்பு சமரசத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. 509 அமர்வுகளில் 2 லட்சத்து 30 ஆயிரம் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 68 ஆயிரத்து 347 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. சமரச தொகையாக 274 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version