ஆப்கானிஸ்தானில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்ட நிலையில், ஜலாலாபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 66 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவர அங்குள்ள அரசும், அமெரிக்க அரசும் தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.
ஆப்கானில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நங்கார்கர் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. நகரின் பல இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 66 பேர் காயம் அடைந்துள்ளனர்.