சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பிரசித்தி பெற்ற ஐய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. ஐய்யப்பனை தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள், சபரிமலை செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து 55 பேருந்துகளும், திருச்சி, மதுரை, புதுச்சேரியிலிருந்து தலா 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

Exit mobile version