63 லட்சம் ஆர்.டி.-பிசிஆர் கருவிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது!!!

கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 63 லட்சம் RT-PCR கருவிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. 10 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது. வரும் மாதங்களில் 53 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டும் பரிசோதனை வேகத்தை அதிகரிப்பதற்காகவும், 63 லட்சம் RT-PCR கருவிகளை மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. தென் கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஆர்டர் செய்துள்ளதில், முதற்கட்டமாக சில லட்சம் கருவிகள் வரும் 10ம் தேதிக்கு பிறகு வர உள்ளன. மீதமுள்ளவை அடுத்தத்த கட்டங்களாக பெறப்படும். இந்தியாவில் தற்போது RT-PCR, VTM உள்ளிட்ட 10 லட்சத்து 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை கருவிகள் உள்ளன.

Exit mobile version