4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 63.16% வாக்குப்பதிவு

நான்காம் கட்ட மக்களவைத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது.

17-வது மக்களவைத் தேர்தலில் 4ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு bகாஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 961 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு, சரியாக மாலை 6 மணிக்கு நிறைவுற்றது. இதில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாக்களித்தனர்.

குறிப்பாக, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாநில போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். வாக்குப்பதிவு முடிவில் 63 புள்ளி 16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

Exit mobile version