பாகிஸ்தானை சேர்ந்த 629 பெண்களை சீனர்கள் கடத்தி சென்றுவிட்டதாக associated press ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானில் பணத்துக்காக ஏழைப்பெண்கள், சீனர்களுக்கு மண முடித்து வைக்கப்படும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.குடும்ப வறுமையின் காரணமாக பாகிஸ்தான் பெண்கள் அதிக அளவில் சிறு வயதிலேயே சீன ஆண்களுக்கு மணமுடித்து வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு மனமுடித்த பெண்கள் சீனர்களின் மனைவிகளாக சீனர்கள் அழைத்து செல்லப்பட்டாலும், அங்கு பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெற்றோரிடம் , தொலைபேசியில் தொடர்புக்கொண்டு எங்களை எப்படியாவது மீட்டு விடுங்கள் இங்கு பல பெண்களை அவர்கள் அனுமதியின்றி பாலியல் தொழிலுக்கு வலுகட்டாயமாக தள்ளுகின்றனர் , என தெரிவித்து வருகின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்களின் தகவலை அடுத்து பாகிஸ்தான் அரசு இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கியது. பெண்கள் கடத்தலை தடுப்பதற்காக பாகிஸ்தான் அரசு முதற்கட்டமாக நடத்திய விசாரணையில் 629 பெண்கள் சீனர்களுக்கு மணமுடிக்கப்பட்டு கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து விசாரணை நடத்தினால் சீனாவிற்கு ,பாகிஸ்தானிற்கும் இடையேயான நட்பில் விரிசல் ஏற்படலாம் என பாகிஸ்தான் அதிகாரிகள் தயங்குவதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே பெண்கள் கடத்தல் வழக்கில் கைதான பல சீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து associated press நிறுவனம் வெளியிட்ட செய்தியில், சட்டபடி திருமணம் செய்து கொண்டு அழைத்து செல்லப்படும் பெண்கள் எதேனும், சித்தரவதை அனுபவித்தாலும் பாகிஸ்தான் சட்டம் எதுவும் செய்யாது என்று சீன இளைஞர்கள் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளது.