இந்தியாவில் ஒரே நாளில் 60 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது.
கொரோனா வைரசால் 24 மணி நேரத்தில் 848 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 லட்சத்து 67 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ள நிலையில், 24 லட்சத்து 4 ஆயிரத்து 585 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 லட்சத்து 93 ஆயிரத்து 398 பேரும், தமிழ்நாட்டில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 352 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 712 பேரும், கர்நாடகாவில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 665 பேரும், உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 382 பேரும் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லியில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 527 பேரும், மேற்குவங்கத்தில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 837 பேரும், பீகாரில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 198 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.