காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,026 கன அடியாக அதிகரித்ததுள்ளது.
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்ததாலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு அதிகரித்ததாலும் மேட்டூர் அணையின் நீர்வரத்து 6 ,000 கன அடியில் இருந்து, 6 ,0 26 கன அடியாக அதிகரித்தது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 5,000 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 800 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.