மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலை தயாரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வு, விவசாயிகளுக்கு உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மை மேம்பாட்டுக்காக 1 லட்சத்து 19 ஆயிரத்து 981 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டமும் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ள மத்திய வேளாண்மை துறை அமைச்சகம், திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் பட்டியலை தயாரிக்குமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.