சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 600 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற வட மாநில இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அந்தமான் விரைவு ரயிலில் கொண்டு செல்வதற்காக 12 பார்சல்களுடன் வட மாநில இளைஞர் ஒருவர் வந்துள்ளார். பார்சல் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகமடைந்த ரயில்வே காவல் படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த காவல்துறையினர் சோதனை செய்த போது 12 பெட்டிகளிலும் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், கடத்த முயன்ற தீபக் சிங் என்ற இளைஞரை கைது செய்தனர்.

Exit mobile version