ஊரடங்கால் பத்திரப் பதிவுத் துறைக்கு ரூ.600 கோடி வருவாய் இழப்பு!

ஊரடங்கு உத்தரவு காரணமாக, பத்திரப் பதிவுத் துறைக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு துறைகள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறைகளில் ஒன்றான பத்திரப் பதிவுத்துறை கடந்த நிதியாண்டில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதனால் நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாயை எதிர்நோக்கி இருந்த நிலையில், ஊரடங்கின் காரணமக 600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் இன்று முதல் பதிவுத்துறை அலுவலங்கள் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கும் நிலையில், இம்மாதம், மீதமுள்ள நாட்களில் சுமார் 150 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று கணித்துள்ளதாக பத்திரப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version