மதுரை இளைஞர் ஒரு நிமிடத்தில் 60 புல் அப்ஸ் எடுத்து உலக சாதனை

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 60 புல் அப்ஸ் எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார்.

மதுரை மாவட்டம் அண்ணாநகரில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் சரவணன் என்பவர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக உலக சாதனையாக உள்ள ஒரு நிமிடத்தில் 54 புல் அப்ஸ் சாதனையை முறியடித்து ஒரு நிமிடத்தில் 60 புல் அப்ஸ் எடுத்துள்ளார் சரவணன்.
குறுகிய காலத்தில் தங்களுடைய உடல்வாகில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என இளைஞர்கள் நினைப்பது தவறு என்று சரவணன் கூறினார். இந்த சாதனையை புரிய தனக்கு உதவிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சரவணனின் சாதனையை பாராட்டி அவருக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

Exit mobile version