மக்கள் குறைதீர் திட்டத்தை செயல்படுத்த 60 குழுக்கள்…

முதலமைச்சர் தொடங்கி வைத்த மக்கள் குறைதீர் திட்டத்தை செயல்படுத்த நெல்லை மாவட்டத்தில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியுள்ளார். நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் திட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகள் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பட்டா மாற்றம், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகள், தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய்த் துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலை, விவசாயம், கால்நடைத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version