திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஸ்ரீசத்புத்திரி நாயகி சமேதஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் தேர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தன. இதையடுத்து, தேர்கள் பணிகளுக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டு, புதிதாக தேர்கள் செய்வதற்கு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையால் கோரிக்கை ஏற்கப்பட்டு, புதிதாக தேர்கள் செய்வதற்கு 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்கள் செய்யும் திருப்பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்தார். முன்னதாக தேர் திருப்பணிக்காக வந்த அமைச்சருக்கு கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விழாவில், செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் மற்றும் துறை அலுவலர்கள், திருப்பணி குழுவினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.