உலக இளம் யோகா சாதனையாளர் விருதினை பெற்ற 6 வயது சிறுவன்

சர்வதேச அளவில் யோகா போட்டிகளில் சாதனை புரிந்த 6 வயது சிறுவன், உலக இளம் யோகா சாதனையாளர் என்ற விருதினை பெற்று அசத்தியுள்ளான்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த நந்தகோபால் மற்றும் சுபா ஆகியோரின் 6 வயது மகன் ஜித்தேஷ். இந்த சிறுவன், 4 வயது முதல் ஆர்வத்துடன் யோகா கலையை ஆர்வத்துடன் கற்று இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை புரிந்துள்ளான். கடினமான யோகாசனங்களை சர்வ சாதாரணமாக செய்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம் பிடித்துள்ளான்.

இளம் வயதில் இதுபோன்ற சாதனைகளைப் புரிந்த சிறுவனுக்கு, ஈரோடு மாவட்டம் பவானியில், நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக இளம் யோகா சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதினைப் பெற்றுக் கொண்ட சிறுவனின் தாயார் சுபா, குழந்தைகள் யோகாவை கற்றுக் கொள்ளூம் வகையில், தமிழக அரசு, அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version