தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் அமைய உள்ள இந்த கல்லூரிகளில், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியையும் 325 கோடி ரூபாயில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த தொகையில், மத்திய அரசு 195 கோடி ரூபாயும், தமிழக அரசு 130 கோடி ரூபாயும் வழங்குகிறது. இதன் மூலம், தமிழகத்திற்கு 900 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்கும் எனவும், அதில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீதம் வெளி மாநில மாணவர்களுக்கும் கிடைக்கும் எனவும் மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version