மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் மற்றும் வாக்காளர் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் புதிய 6 செயலிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது குறித்து தகவல் அளித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தல் தேதி அறிவித்தப் பிறகு C-VIGIL எனும் புதிய செயலி உள்ளிட்ட 6 செயலிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிட்டார். மேலும், இந்த செயலிகள் மூலம் பொதுக்கள் தேர்தல் தொடர்பான தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனக்கூறிய அவர், புகார்களின் மீது 1 மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். புதிய வாக்களார் பதிவு, பெயர் உள்ளிட்ட விவரங்கள் திருத்துதல் உள்ளிட்ட அனைத்திற்கும் பயன் பெரும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் குற்றங்கள் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அப்போது குறிப்பிட்டார்.