தமிழகத்தை சேர்ந்த 6எம்.பி இடங்களுக்கான தேர்தல் வேட்பு இன்று மனுத்தாக்கல்

மாநிலங்களவையில் காலியாகும் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி இடங்களுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

தமிழகத்தை சேர்ந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகிய 5 பேரின் பதவிகாலம் ஜூலை 24 ந் தேதியுடன் நிறைவடைகிறது. இவர்களுடன் திமுகவை சேர்ந்த கனிமொழி ராஜினாமாவை சேர்த்து, தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி. இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 9ஆம்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 11ஆம்தேதி கடைசி நாள். வாக்குப்பதிவு தேவைப்படும் பட்சத்தில் ஜூலை 18 ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version