இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைக்க அமெரிக்கா சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சென்னை கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட 7 இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மேலும் 6 அணுமின் நிலையங்களை அமைக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க ஆயுத கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புத்துறை கீழ்நிலை செயலாளர் ஆண்ட்ரியா தாம்சனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சந்தித்து பேசினார். இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், இதுகுறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இருதரப்பு பாதுகாப்பு மற்றும் அணுசக்தி ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும் இந்தியா மற்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அணுமின்நிலையங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆண்ட்ரியா தாம்சன் மற்றும் விஜய் கோகலே சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது குறித்த தனது ஆதரவை அமெரிக்கா மீண்டும் உறுதி செய்துள்ளது.